Price: ₹100
Pages: 328
ISBN: -----
கோட்டைப்புரத்துவீடு! இது ஒரு இருபத்தைந்து வருடங்கள் முன் வெளிவந்த தொடர் என்று நினைக்கிறேன். இது வெளிவரும்போது நான் எட்டாவதோ ஒன்பதாவதோ படித்துக் கொண்டிருந்தேன். அப்போதே நாவல்களை வாசிப்பேன். அதுவும் மர்ம நாவல்கள் என்றால் ஓர் குஷி. இந்த தொடர் என்னை அப்போதே வசியம் செய்த ஒன்று. காலப்போக்கில் இந்தகதை என் மனதில் மறைந்துவிட்டாலும் அந்த பெயர் அப்படியே பசுமரத்தாணி போல பதிந்து கிடந்தது. போனவருடம் புத்தகச்சந்தையில் இந்த நாவலை பார்த்ததும் வாங்கினேன். உடனே படிக்க மனது தூண்டினாலும் முடியவில்லை! இன்னும் நிறைய நூல்கள் கிடப்பில் இருக்கின்றன. இன்று காலை முதல் இடைவிடாத மழை! மதியம் உணவு உண்டபின் முதல் வேலையாய் நாவலை எடுத்துவந்து படிக்க ஆரம்பித்தேன். ஒரு மூன்று மணி நேரம் இடைவிடாது வாசித்து முடித்து நிமிர்ந்த போது மணி 4.30 ஆகிவிட்டது. மழை விட்ட பாடில்லை. இணையம் பக்கம் வரவில்லையே என்று கூட அப்புறம்தான் தோன்றியது அவ்வளவு சுவாரஸ்யம்.