Price: ₹75
Pages: 176
ISBN: -----
மனிதனுக்கு சனி பிடிக்கும் என்று மதத்தில் சொல்வார்கள். அனால் இப்போதோ மதத்திருக்கிறது. அதுவும் ஏழரை சனி என்று ஏழரை வருடத்தில் விட்டுத் தொலைக்கும் சனியாகத் தோன்றவில்லை. மமதை மிக்க மத போதகர்கள், காவிரி நிழலில் காமம் பயிரிடும் கழிசடைகள், பேராசை ஜனங்களின் பேயாசை தூண்டி தன்னையும் தன் குடும்பத்தையும், முடிந்தால் தன் ஜாதியையும் வளர்த்துக் கொள்ளும் பணந் தின்னிக்கழுகுகள், மூடத்தனத்தை மூலதனமாக்கி, முட்டாள் தனத்தை மதத்தின் பெயரால் முன் மொழிந்து மக்களை மக்க வைக்கும் புராணப் புளுகிகள், தன் சிற்றிவை முடிந்த முடிவு எனக் கருதி சொன்னதே சொல்லி கேட்பவரைச் சிந்திக்கவொட்டாது சிறை பிடித்து, பெரிய நாமத்தைத் தானும் போட்டு, பட்டை நாமத்தை மக்களுக்கும் போடும் சிற்றறிவுச் செம்மல்கள் இப்படி நூற்றுக்கணக்கான சனியன்கள் சமயத்தைப் பிடித்து ஆட்டிப் படைக்கும் போது நாம் என்ன செய்ய வேண்டும் ? சும்மா இருப்பதா? சாராய வியாபாரத்தில் சம்பாதித்த லகரங்களில், நூறுகளைக் கோவிலில் வீசும் விரோதிகளைப் பெரிய மனிதனாக்கும் கோவில் கமிட்டிகளையும் , அவர்களைக் கடவுள் பணியாளர்களாகக் கருதுகிற மூடஜனங்களையும், பாரதி பாஷையில் சொன்னால் மோதி மிதித்திருக்கிறேன் . முகத்தில் உமிழவிருப்பம் இல்லை. விட்டு விட்டேன். அன்புடன் . சுகி. சிவம்.