Price: ₹275
Pages: 271
ISBN: 9789352440115
தி.ஜானகிராமன் நாவல்களில் மிகுந்த இலட்சியவாதத்தன்மை கொண்டது உயிர்த்தேன். பெண் நிலையை அழுத்தமாகச் சொல்லும் நாவலும் இதுவே. பெண் மனதின் இருநிலைகள் அனுசுயாவும் செங்கம்மாவும். அனுசுயா வெளிப்படையானவள். தனது இருப்பைக் கருத்துகளால் விளங்கிக் கொண்டவள். பெண்ணியல்பின் புறம் அவள். செங்கம்மா அந்தரங்கமானவள். வாழ்வை உணர்வின் தீவிரத்தால் அடையாளம் காண்பவள். பெண்ணியல்பின் அகம் அவள். இவ்விரு நிலைகளிலிருந்தும் மனிதர்களை நேசிப்பது தங்களது பிறவிப் பொருளாகக் கருதும் புள்ளியில் இருவரும் இணைகிறார்கள். அன்புக்கும் மானுடப் பரிவுக்கும் காதலுக்கும் அகம் என்றும் புறம் என்றும் பேதமில்லை என்பதைத் தமது செயல்களால்நிறுவுகிறார்கள்.