Price: ₹80
Pages: 45
ISBN: -----
மாதக்கணக்கில் பயணம் தொடர்ந்து, கடைசியில் ஒரு பச்சைச்சோலை கண்ணுக்குத் தெரியும். புதைந்திருந்த பூமியின் இரகசியம் வெளிப்பட்டதைப் போல. எல்லா ஜீவராசிகளும் ஒன்றுகூடி, அந்த நீர்ச்சுனையில் தலைதாழ நீர் அருந்தும். நீர்ப்பிம்பத்தில் புலிக்கு அருகில் மான் இருக்கும். உயிர்நீரை சுரக்கிற அவ்விடத்தில் வேட்டை என்பது நிகழாது. எல்லா உயிர்களும் ஒரு சுயவரையரைக்குள் நிற்கும்போது ஒரு வெப்பவெளி தனது மறைநீரை தந்து, அவைகளின் தாகங்களைப் பெற்றுக்கொள்கிறது.‘பிஸ்கட் நிலாக்கள்’ ஜான் சுந்தர் அண்ணின் கவிதைத்தொகுப்பாக, குக்கூ காட்டுப்பள்ளி தன்னறம்-நூல்வெளியின் மூலம் வெளியீடு கொள்கிறது. அவரிடம் இருந்து வருகிற இச்சொற்கள், நம் அறிவில் படிந்துள்ள அழுக்குகளை அகற்றுவதாக இருக்கும். இதுவரை நாம் இறுகப்பிடித்து வைத்திருக்கும் நம் வெற்றறிவுத்தனத்தை அன்பின் நீர்மையால் இக்கவிதைகள் நிரப்பும். கவிதைகளின் உயிர்ப்பை காட்சிகளாக ஆக்கித்தந்திருக்கும் கார்த்திக் பங்காருவின் கருப்பு-வெள்ளை புகைப்படங்கள் கண்விழியை மலரவைக்கிறது.