Loading…

திருவாசகம் மூலமும் உரையும் /Thiruvasagam moolamum Uraiyum

திருவாசகம் மூலமும் உரையும் /Thiruvasagam moolamum Uraiyum
Author: :உரை: தமிழ்ப்பிரியன்

Price: ₹230

Pages: 552

ISBN: 9789385814792

' திருவாசகத்திற்கு உருகாதார் , ஒரு வாசகத்திற்கும் உருகார் ' என்பது திருவாசகத்தின் சிறப்பை உணர்த்தும் பொன்மொழி ஆகும் . திரு - வீடுபேறு ; வாசகம் - அனுபவம் முதிர்ந்த நிலையில் எழுந்த அருள்வாக்கு . இறைவன் உள்நின்று உணர்த்த , அதன் பிரதிபலிப்பாக உண்டான வாக்கே திருவாசகம் . உடலையும் , உள்ளத்தையும் ஒருசேர உருக்குகின்ற தெய்வத் தமிழ்நூல் திருவாசகம் ஆகும் . மாணிக்கவாசகர் கூற , அதனைக் கேட்டு இறைவனே எழுதியது திருவாசகமாகும் . இது திருவாசகத்திற்கே உரிய தனிச்சிறப்பாகும் . திருவாசகத்தைப் போற்றிப் பாராட்டாத ஞானிகள் இலர் . வடலூர் வள்ளல் பெருமானாகிய இராமலிங்க அடிகளார் திருவாசகத்தை , " வான்கலந்த மாணிக்க வாசகநின் வாசகத்தை நான்கலந்து பாடுங்கால் நற்கருப்பஞ் சாற்றினிலே தேன்கலந்து பால்கலந்து செழுங்கனித்தீஞ் சுவைகலந்துஎன் ஊன்கலந்து உயிர்கலந்து உவட்டாமல் இனிப்பதுவே " என்று வியந்து பாராட்டியுள்ளார் . வான் கலந்தவர் மாணிக்கவாசகர் ; இவர்தம் வாசகத்தைத் தாம் கலந்து பாடுகின்றார் வள்ளல் பெருமானார் . அவ்வாறு பாடும் போது அந்தப் பாடல் எவ்வாறு இருந்தது தெரியுமா ? கரும்புச் சாற்றிலே தேன் கலந்தது ; பால் கலந்தது ; செழுமை யான கனியின் இனிய சுவை கலந்தது . எல்லாம் கலந்ததோடு , அவர் உடலில் கலந்து , உயிரிலும் கலந்து , தெவிட்டாத அமுதமாக விளங்கியது என்பது மேற்காணும் பாடலின் விளக்கமாகும்

Goodreads reviews for திருவாசகம் மூலமும் உரையும் /Thiruvasagam moolamum Uraiyum