Price: ₹140
Pages: 176
ISBN: -
ஆன்மீக வழிபாடு நமக்கு அதிகமாக இருக்கிறது ஆனால் ஆன்மீகத்தைப் பற்றிய அறிதல் குறைவாகவே இருக்கின்றது . பூஜை சடங்குகளை செய்யும் போது அதற்கான காரண காரியங்களை அறிந்து செய்தால் வழிபாட்டில் ஈடுபாடு அதிகமாகும் . பக்திப் பரவசம் பெருகும் . வெறும் சடங்குகளை மட்டும் பின்பற்றினால் என்னவாகும் என்பதை விளக்க ஒரு வேடிக்கைக் கதை உண்டு . கொண்டிருந்தார் . துறவி ஒருவர் கையில் கமண்டலத்தோடு நடந்து ஆற்றங்கரைக்கு வந்ததும் குளிக்க ஆசைப்பட்டார் கமண்டலம் பத்திரமாக இருக்க வேண்டுமே என்று மண்ணில் குழி தோண்டி புதைத்தார் . திரும்பி வந்து தேடும் போது அடையாளம் தெரியாமல் போய்விடக் கூடாது என்பதற்காக அந்த இடத்தில் ஒரு மண் குவியலை கோபுரம் போல் அமைத்தார் . தூரத்திலிருந்து வெளியூர்க்காரர் ஒருவர் இதைப் பார்த்துக் கொண்டே வந்தார் . ' ஓகோ ' ! இந்த ஆற்றில் குளிக்க வேண்டுமென்றால் இப்படி மண்ணைக் குவித்து வைத்து விட்டுத்தான் குளிக்க வேண்டும் போல் தெரிகிறது . என்று அவரும் ஒரு குவியலை அமைத்து விட்டுக் குளிக்கப் போனார் . தொடர்ந்து வந்த எல்லோரும் அதையே காப்பி அடித்தார்கள் துறவி குளித்துவிட்டு வெளியே வந்து கமண்டலத்தைத் தேடினார் . மண் குவியல் அடையாளம் பயன்படவில்லை ஏனென்றால் நிறைய மண் குவியல்கள் இருந்தன....