Price: ₹270
Pages: 192
ISBN: -
எழுத்தாளர் கலைமாமணி இளசை . சுந்தரம் அவர்கள் உருவாக்கியுள்ள " நீங்களும் வெற்றி பெறலாம் " என்ற இந்நூலில் இவ்வளவு விவரங்களையும் தெளிவாகவும் , அனைவரும் விரும்பும் வகையிலும் விளக்கியுள்ள விதம் நிச்சயம் அனைவரது பாராட்டையும் பெறும் என்பதில் ஐயமில்லை . தேவையான இடங்களில் சிறுசிறு கதைகள் , மேற்கோள்கள் , அறிஞர்கள் , வெற்றியாளர்களின் நிலைப்பாடு ஆகியவை முத்துமுத்தாக எடுத்து விளம்பிய விதம் அவருக்கு மேலும் ஒரு மணி மகுடமாகும் . வயது வித்தியாசமின்றி அனைவரும் படித்து உணர்வுப் பூர்வமாக தன் உள்ளத்தில் உள்ள இலட்சியத்தை தட்டி எழுப்புவதாகவே இந்நூல் இருப்பதாக உணர்கிறேன் . எங்களது முத்தூர் பதிப்பகம் இத்தகைய தலைசிறந்த நூல்களை வெளியிடுவதில் பெருமை அடைகிறது . கலைமாமணி அவர்களின் உறவு எங்கள் பதிப்பகத்திற்கு ஒரு நல்ல நூல் வெளியிட உதவியிருக்கிறது என்பதில் பெருமையடைகிறோம் .