Loading…

வெள்ளையானை / Vellai Yaanai

வெள்ளையானை / Vellai Yaanai
Author: ஜெயமோகன் / JEYAMOHAN

Price: ₹500

Pages: 424

ISBN: 9789384598563

பிரிட்டிஷார் இந்தியாவை ஆண்ட போது (தற்போதிருந்து 150 ஆண்டுகளுக்கு முந்தைய) மதராஸ் மாகாணத்தின் அடித்தட்டு மக்களின் நிலையயை மிக அப்பட்டமாக எடுத்துக் காட்டுகிறது இந்நூல். தமிழர்கள் மிகச்சிறந்த பண்பாட்டோடு வாழ்ந்த மக்கள் என்று கூறப்பட்டாலும், அவர்களுக்குள்ளேயே உயர் சாதியினர் (செல்வச் செழிப்போடும் அதிகாரத்தோடும் உள்ளவர்கள்) தாழ்ந்த சாதி என்று ஒரு பகுதியினரை ஒதுக்கி வைக்கின்றனர். இரத்தம் சுண்ட அவர்கள் உழைத்த போதும் வாழ்வின் அடிப்படை உரிமைகள் அவர்களுக்கு எட்டாக் கனியாகவே இருந்திருக்கிறது. பஞ்சம் என்று வந்த போதும் அதை வைத்து செல்வம் சுரண்டும் அரசு ஒரு பக்கம், சக மனிதர்கள் சாவதை ஒரு துயரமாகவே காணாத உயர் சாதி குடிமக்கள் ஒரு பக்கம். இவர்களுக்கிடையில் பஞ்சத்தால் சாகும் மக்களைப் பற்றி கவலை கொண்ட ஒரு பிரிட்டிஷ் காப்டனின் நிலையிலிருந்து காட்சிகளை விளக்கியுள்ளார் ஆசிரியர் ஜெயமோகன். சமீபத்தில் படித்ததில் மனத்தை பாதித்த ஒரு நூல். ஆசிரியர் முன்னுரையில் கூறுவது போல தாழ்த்தப்பட்ட மக்களின் மீதான சுரண்டலுக்கும், கொடுமைகளுக்கும் நாமும் தார்மீக ரீதியில் பொறுப்பு எனும் போது நிச்சயம் மனம் குற்ற உணர்ச்சியடைகிறது. சக மனிதனை சமவுரிமையோடு நடத்துவோம். இனி வரும் சமுதாயத்தில் ஏற்றத்தாழ்வை ஒழிப்போம். நிச்சயம் படிக்க வேண்டிய நூல்.

Goodreads reviews for வெள்ளையானை / Vellai Yaanai