Loading…

வனப்பேச்சி / vanappechi

வனப்பேச்சி / vanappechi
Author: தமிழச்சி தங்கபாண்டியன்

Price: ₹120

Pages: 120

ISBN: 978-8189912451

தொண்ணூறுகளுக்குப் பிறகு எழுத வந்த இளம் கவிஞர்களில் நம்பிக்கைக்குரிய குரல் தமிழச்சியுடையது. அவருடைய முந்தைய தொகுப்பான 'எஞ்சோட்டுப் பெண்'ணிலிருந்து இப்போது அவர் கவிதையில் வந்து சேர்ந்திருக்கும் இடமும் எதிர்கொள்ளும் சவால்களும் தனது மொழியினைப் புதிப்பித்துக்கொள்வதில் அவரது இடையறாத உத்வேகத்தையே காட்டுகின்றன. தமிழில் மிகக் குறைவான கவிஞர்களே இத்தகைய உத்வேகத்தை, நிம்மதியின்மையைக் கொண்டிருக்கிறார்கள். தமிழச்சியின் கவிதைகளில் மூன்றுவிதமான கவித்துவம் சார்ந்த தேர்வுகள் செயல்படுகின்றன. ஒரு விதத்தில் அதுதான் தமிழச்சியின் ஆளுமையை நிர்ணயிக்கும் மூன்று நீரோட்டங்களும்கூட. முதலாவ தாக, தான் நீங்கி வந்த மண் சார்ந்த நிலக் காட்சிகளும் மனித உறவுகளும். 'எஞ்சோட்டுப் பெண்'ணில் அந்த மண்ணில் வேர் கொண்டு அதன் ஒரு பகுதியாக இருந்து எழுதிய தமிழச்சி இதில் வேரிழப்பின் துக்கத்தோடு எழுதுகிறார். வனப்பேச்சி என்ற நூல் தலைப்புக் கவிதை இதற்கு ஒரு உதாரணம். வனப்பேச்சியை இந்த நகரத்திற்குப் பழக்க முடியாது. நமது நாகரிக உலகின் மதிப்பீடுகளை, பழக்கவழக்கங்களை அவள் கற்றுக்கொள்ளமாட்டாள். நாம் உருவாக் கிய ஊர்களில் தெருக்களில் வீடுகளில் அவள் நடமாடுவதற்கான வெளி ஏதும் இல்லை. வனப்பேச்சி என்ற இந்த உக்கிரமான படிமம் வேறு கவிதைகளிலும் ஊடாடி வருகிறது. வனப்பேச்சி நாம் இழக்கும் அடையாளங்களின் குறியீடாக தமிழச்சியின் கவிதைகளில் உருக்கொள்கிறாள்.

Goodreads reviews for வனப்பேச்சி / vanappechi