Price: ₹65
Pages: 103
ISBN: ----
மதமும்¸ மருத்துவமும் தொடாத மனித வாழ்க்கையே இருக்க முடியாது. அண்மையில் நடந்த ஆய்வின்படி அமெரிக்க ஐக்கிய நாடுகளில் 18 சதவீத மக்கள் தான் எந்த மதத்தையும் சாராது உள்ளனராம். மருத்துவமனையோ¸ மருத்துவரையோ காணாமல் எந்த மனிதனும் காணாமல் போனது இல்லை தான். மதங்கள் என்று சொல்லும் பொழுது நாம் என்ன புரிந்து கொள்கிறோம்? சிதறிக் கிடந்த ஆதி மனிதனை ஒன்று சேர்க்க மதங்களும் உதவின. நான் இன்ன கொள்கைகளைக் கடைப்பிடிப்பேன் என்று ஒத்துக் கொண்டவர்கள் எல்லாம் ஒரு மதத்தின் கீழ் வந்தனர். அந்தக் கொள்கைகள் அந்தச் சமுதாயத்திற்கு அன்றைக்குப் பொறுத்தமானவையாக இருந்தன. ஆனாலும் பெரும்பாலான மதங்கள் ஆதிக்கக் கொள்கையை அவ்வப்பொழுது மாற்ற ஒத்துக்கொள்வது இல்லை. எப்படி ஒரு தேசத்தின் அரசியல் அமைப்புச் சட்டத்தையோ¸ ஒரு அரசியல் கட்சியின் கொள்கைகளையோ¸ ஒரு சங்கத்தின் விதிகளையோ மாற்றுவது அவ்வளவு எளிதில்லையோ அப்படி அடிக்கடி அவைகளை மாற்றிக்கொண்டு இருந்தால் அந்த மதத்தை ஸ்தாபித்தவருடைய¸ அந்தக் கட்சியைத் தொடங்கியவருடைய¸ அந்த சங்கத்தைக் கூட்டியவருடைய மரியாதை குறைந்துவிடும் என்றும் மற்றவர்கள் நம்பியதால்...........