Price: ₹200
Pages: 240
ISBN: ----
‘இறவாத புகழுடைய புது நூல்கள் தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும் சென்றிடுவீர் எட்டுத்திக்கும் - கலைச்செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!!!” என்று பணித்த ஞானபாரதி காட்டிய பாதையில் உலகத் தரம் பெற்ற படைப்பிலக்கியங்கள் பலவற்றைத் தமிழில் மொழி ஆக்கம் செய்து தமிழன்னைக்கு முத்தாரமிட்டவர் பேராசிரியர் நா.தர்மராஜன்.கதை¸இலக்கியம், கவின் உணர்வில் வல்லார் அவரது உணர்வின் உந்துதலால் மலர்வது¸அதில் தென்றலின் மன்றலும் மணக்கும்;;¸ புயலின் சீற்றமும் வெடிக்கும். உணர்வில் வல்லார் தாம் உணர்ந்தபடி உணர்த்தியுள்ள படைப்பிலக்கியத்தை¸ மொழி பெயர்ப்பாளர் பிற மொழியில் மொழியாக்கம் செய்வது¸ படைத்தவர் படைத்தபடி¸ அவர் உணர்ந்தவாறு உணர்ந்து உணர்த்துவது அருமை. புதியநுட்பம் பொதிந்தது. அத்தகைய அருமை மிளிர் ஆற்றலால் பெருமை பெற்றவர் பேராசிரியர் நா.தர்மராஜன்.