Price: ₹150
Pages: 200
ISBN: ----
நல்லொழுக்கத்தையும் - நல்ல சிந்தனையையும் இளம் சிறார்களின் எண்ணத்தில் பதிய வைப்பதற்கு நல்ல பாடல்கள் - நல்ல கதைகள் பெரிதும் பயன்படுகின்றன. குறிப்பாக கதை கேட்பது என்பது இளம் பிள்ளைகளுக்கு பேருவகையை அளிக்கும். கதைகள் மூலம் மிகப் பெரிய செய்தியைக் கூட மிக எளிமையாக கேட்போர் மனதில் பதிய வைக்கமுடியும். அரிச்சந்திரனின் கதை கேட்டதால் தான் 'உண்மையே பேச வேண்டும்” என்ற உறுதியை நம் தேசத்தந்தை மகாத்மா காந்தி தன் வாழ்நாள் முழுவதும் கைக்கொண்டு வாழ்ந்தார். அதைப் போலவே வீர சிவாஜியும் மாபெரும் வீரர்களின் கதைகளைத் தன் இளமைப் பருவத்தில் தனது தாயாரின் மூலமும்¸ குருவின் மூலமும் கேட்டு அறிந்த காரணத்தால் மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்கும் வலிமையையும் திறனையும் அடைந்தார். அந்த வகையில் உலகத்தின் மிகப் பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்ட நூலான பைபிளில் கூறப்பட்டுள்ள கதைகளை மிகஎளிமையாகவும் மிகச் சிறப்பாகவும் அனைவரும் புரிந்து கொண்டு படித்து பயனடையும் வகையில் பழைய ஏற்பாட்டில் 50 கதைகளும்¸ புதிய ஏற்பாட்டில் 50 கதைகளும் ஆக 100 கதைகள் ‘பைபிள் கதைகள்” என்ற இந்தத் தொகுப்பில் ஆங்காங்கே அழகிய படங்களுடன் சேர்த்து திரு.கோசுதா அவர்கள் தொகுத்து அளித்துள்ள நூலானது சிறுவர்கள் மட்டுமில்லாமல் அனைவரும் இன்புறத்தக்கதான சிறந்த நூலாகும்.