Loading…

ஆலமரம் / Aalamaram

ஆலமரம்  /  Aalamaram
Author: பாலகுமாரன் Balakumaran

Price: ₹85

Pages: 240

ISBN: 0

வாழ்க்கை என்பது மெல்ல மெல்ல அவிழும் புதிர். வாழ்க்கை பற்றி தான் நிறைய யோசித்திருக்கிறேன். பிறந்த குழந்தைகள் எல்லாமே தெய்வ வடிவம் என்பார்கள். அதற்கு எந்த பேதமும் இல்லை¸ தெய்வத்தைப் போலவே. எனவே இந்த முதல் நிலையில் தெய்வம் தெய்வமாகவே பிறக்கிறது எனலாம். பிறந்த சிசுவிற்கு முன்னே நீண்டு கிடக்கும் வாழ்க்கை என்ன தெரியும் அதற்கு? எதையும் ஆரம்பிப்பதற்கு முன்னால் பிரம்மிப்புதான். ஆனால்¸ அதனைக் கடந்து நின்று பார்க்கும் போது ச்சட்... இவ்வளவுதானா... இதற்கா பிரம்மித்தோம் என்று தோன்றும். ஆனால்¸ஆத்ம தரிசனம் என்பது அவ்வளவு சுலபமல்ல என்று தோன்றுகிறது. இதற்கு தகுந்த கேள்விகளும்¸ பதில்களும்¸ மனோபலமும் இருக்க வேண்டும். ..... திரு பாலகுமாரன் அவர்களின் நாவல் ஒவ்வொன்றும் ஏதோ ஒரு விதத்தில் ஒரு கேள்வியை எழுப்பி படிப்பவரை எதற்கோ தயார் செய்து வருகிறது என்பது நிஜம். அப்படித்தான் ஆலமரமும். வீடு¸ அலுவலகம்¸ குழந்தைகள்¸ எழுத்து என்று ஓயாத பணிகளுக்கிடையில் இந்த ஆலமரத்தின் கீழ் சற்று இளைப்பாறலாம்....

Goodreads reviews for ஆலமரம் / Aalamaram
No ISBN available to load Goodreads reviews. Search on Goodreads