Price: ₹75
Pages: 185
ISBN: ----
தமிழ் இலக்கிய வரலாற்றில் இக்கால இலக்கியங்களின் தோற்றம் குறிப்பிடத்தக்க ஓன்றாகும். மன்னன், இறைவன் என்ற நிலையிலேயே பெரும்பான்மையான இலக்கியங்கள் எழுதப்பெற்றன. வணிகர் குலத்தில் தோன்றிய கோவலன் கண்ணகி சிலப்பதிகாரத்தில் தலைமை மனிதராக அமைந்ததால் இதனை அறிஞர்கள் குடி மக்கள் காப்பியம் எனப் போற்றுவர். மூட நம்பிக்கை, வேலையில்லாத் திண்டாட்டம், வரதட்சினைக் கொடுமை, சாதிவெறி, கந்துவட்டி, குடியல், பாலியல் வன்முறை இன்னும் என்னென்ன மக்களைக் கொடுமைப் படுத்துகின்றனவோ அவையெல்லாம் இக்கால இலக்கியங்கள் வழி வெளிப்படுத்தப் பெறுகின்றன. தொடக்க காலச் சிறுகதை எழுத்தாளர்கள் கொடுத்த கோலை ஊன்றிக் கொண்டுதான் நாம் எழுதுகின்றோம். இந்தக் காலத்தில் நாம் சந்திக்கக் கூடிய நிகழ்ச்சிகள் சிக்கல்களை எல்லாம் புதுமைப் பித்தன் சிறுகதைகளில் காணும்போது வியப்பாக இருக்கின்றது. புதுமைப்பித்தன் சிறுகதைகள் - 1 என்னும் இத்தொகுப்பில் ஏழு சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. புதுமைப்பித்தன் தொடாத கதைக்கருவே இல்லை என்னும் தன்மையை அவரது சிறுகதைகளைப் படிக்கும்போது அறிந்து கொள்ளலாம்.