Price: ₹80
Pages: 128
ISBN: ----
பெண்மையின் பேராற்றலைப் பற்றிய வினோபாஜியின் கருத்துக்கள் மிகவும் சிறப்பானவை. ஆன்மீக நிலையிலிருந்து பெண்களின் சமத்துவம் பற்றி அவர் பேசுவது உற்றுநோக்கத்தக்கது. பெண்கள் வேதம் படிக்க வேண்டாம் என்றிருந்த நிலையை மாற்றி அவர்களும் வேதங்களும், உபநிஷத்துக்களும் படித்து ஆய்ந்து துறவிகளாக சமூக சேவை செய்யலாம் என்பதற்காக ப்ரம்ம வித்யா மந்திரத்தை வினோபாஜி ஏற்படுத்தினார். இன்னும் அங்கு துறவறம் பூண்ட பெண்கள், உடல் உழைப்போடு கொண்ட ஆன்மீக நாட்டத்தில் தோய்ந்திருக்கிறார்கள். வினோபாஜி காட்டிய வழியில் புதுமைப் பெண்களாகவும் போற்றுதலுக்குரிய சமூக சேவகிகளாகவும் அவர்கள் விளங்குகிறார்கள். பெண்ணியம் பற்றிய புதிய பார்வையைக் கொடுக்கும் இந்த நூலை பெண்கள் படித்துப் பயன்பெற வேண்டும் என்பது மட்டுமின்றி, பெண்களை தாயுள்ளோதோடு காணும் அனைவரும் படித்து பயன்பெற வேண்டியது அவசியமானதும் ஆகும்.