Loading…

கம்பன் பன்முகப் பார்வை / Kamban Panmuga Paarvai

கம்பன் பன்முகப் பார்வை / Kamban Panmuga Paarvai
Author: பேராசிரியர் சாலமன்.பாப்பையா / Perasiriiiyar Salam

Price: ₹80

Pages: 184

ISBN: ----

பன்னிருத் தமிழறிஞர்களின் கட்டுரைத் தொகுப்பே 'கம்பன்-பன்முகப் பார்வை' எனும் இந்த நூல். கம்பனது பன்முகப் பார்வை, கம்பனைக் குறித்த பன்முகப் பார்வை என இரு முறைகளிலும், இந்நூலைப் படிப்பவர்கள் கொள்ளுமாறு இடப்பட்ட தலைப்பு இது. கம்பன் தனக்கு முன்னர் வாழ்ந்த கவிஞர்களைப் பார்த்துப் பயின்ற பார்வை இந்நூலில் இடம் பெற்றுள்ளது. திருவள்ளுவரும், ஆழ்வார்களும், திருத்தக்க தேவரும் அவனுக்கு இலக்கிய, சமய, ஞானப் பார்வை வழங்கியவர்களே. கம்பன் அவனுடைய முன்னோரைத் தழுவிக்கொண்டது போலக் கம்பனைத் தழுவிய பின்னோர் தாம் துளசி, வீரமாமுனிவர், பாரதி முதலியோர். மதுரை - கம்பன் கழக அறக்கட்டளை மாதந்தோறும் மூன்றாம் செவ்வாய்க் கிழமையில் நடத்திய ஆய்வுப் பொழிவுகள், தமிழ் மக்களுக்கு நின்று பயன் தரவேண்டும் என்னும் எண்ணத்தின் விளைவே இந்த நூல்.

Goodreads reviews for கம்பன் பன்முகப் பார்வை / Kamban Panmuga Paarvai
No ISBN available to load Goodreads reviews. Search on Goodreads