Price: ₹50
Pages: 56
ISBN: ----
காந்தியின் செயலராக இருந்த மஹாதேவ் தேசாய் அவர்களின் புதல்வர் நாராயண் தேசாய் தன் இளமைக் காலங்களை காந்தியுடன் கழித்தவர். பின்னர் சர்வோதய அமைப்பில் முனைப்புடன் செயலாற்றியவர். ஜெயப்ரகாஷ் நாராயண், வினோபா பாவே போன்ற ஆளுமைகளுடன் நெருங்கிப் பழகியவர். காந்தியின் வாழ்க்கையை 108 இடங்களில் சொல்ல வேண்டும் என்று திட்டமிட்டு, எளிமையான ஹிந்தியில் 'காந்தி கதா' என்ற நிகழ்வினை செயல்படுத்தி வந்த சுற்றுப் பயணத்தின் ஒரு பகுதியாக நாராயண் தேசாய் செப்டம்பர் 2012-ல் மதுரைக்கு வந்தார். காந்தி அருங்காட்சியக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில் பங்கு பெற வந்த இருவரின் பதிவுதான் இந்தச் சிறுநூல். 'காந்திய காலத்திற்கொரு பாலம்' எழுதிய திரு.த.கண்ணன் திருக்குறளைக் கொண்டு மாணவர்களுக்குத் தலைமைப் பண்புகளுக்கான பயிற்சி வகுப்புகளை எடுப்பவர். சமூகப் பிரக்ஞையும் வாசிப்பாற்றாலும் உடையவர். அவர் நாராயண் தேசாயுடன் உரையாடியதைப் பதிவு செய்திருக்கிறார்.