Price: ₹540
Pages: 120
ISBN: 9788178230153
ஒரு கணம்கூட இடையீடின்றி வாழ்க்கை நமக்கு அனுபவங்களை கொண்டு வந்த வண்ணம் இருக்கிறது. அவற்றுள் சில இன்ப அனுபவங்கள், சில துன்ப அனுபவங்கள், இன்பம் வரும்போது மகிழ்கிறோம், துன்பம் வரும்போது துவள்கிறோம். அவ்வாறு நமது வாழ்க்கை மகிழ்ச்சிக்கும் துயரத்திற்கும் இடையில் ஊசலாடிக்கொண்டிருக்கிறது. ஓயாத இந்த ஓட்டத்திற்கு முடிவே கிடையாதா, விடிவே கிடையாதா என்று மனம் சிலவேளைகளில் அங்கலாய்க்கிறது. உண்டு, விடிவு உண்டு என்கிறது முண்டக உபநிஷதம் ' நீ நிழலை பற்றிக்கொண்டு அதனுடன் யுத்தம் செய்கிறாய்' என்று கூறுகிறது இந்த உபநிஷதம்.