Price: ₹130
Pages: 512
ISBN: ----
இன்று இந்த தேசத்தில் ஆன்மிக எழுச்சியும் இல்லை. கவிதைகளும் காவியமும் உருவாகிற இலக்கிய எழுச்சியும் இல்லை. மூடப் பழக்க வழக்கங்களை போக்கித் துணிவான வாழ்க்கையைக் காட்டும் சமுதாய எழுச்சியும் இல்லை. தோள்கொட்டினவனுக்கு மற்றைய உணர்வுகளெல்லாம் மறந்து, மறைத்து, வலி ஒன்று மட்டுமே உரைப்பது போல், பள்ளிகூடச் சிறுவனிலிருந்து பல்போன கிழவர்கள் வரை அரசியல் எழுச்சி ஒன்றே இருக்கிறது. முழங்காலுக்குக் கீழ் சதை போட்டுப்படுத்துவிடுகிற யானைக்கால் வியாதிபோல் அரசியல் ஒன்றே கதி என்று ஆகிவிட்டது"..இவை போன்ற நாட்டின் நிலையையும் மக்களின் போக்கையும் அறிவுறுத்தும் சிந்தனை சுடர்களும் இந்நாவலில் இடம் பெற்றுள்ளன.