Price: ₹10
Pages: 46
ISBN: ----
ராவணன் தம்பி விபீஷணன் ராவணனைப் பிரிந்து, ஸ்ரீ ராமபிரானிடம் சரணாகதி வேண்டி வருகிறான். ஸ்ரீராமன் அருகில் இருந்த சுக்ரீவன் ஜாம்பவான், அங்கதன், நளன், நீலன் உள்ளிட்ட அனைவரும் விபீஷணனுக்கு சரணாகதி வழங்கக் கூடாது என எதிர்க்கின்றனர். ‘இலங்கையைச் சுற்றி வந்தபோது, மது, மாமிசம் இல்லாமலும் வேத பாராயணங்கள் ஒலித்துக் கொண்டும் இருந்த ஒரே இடம் விபீஷணன் மாளிகை மட்டுமே; ராவணன் என்னை சிறைப்பிடித்துக் கொல்ல ஆணையிட்டபோது, தூது வந்தவனைக் கொல்வது பாவம் எனத் தடுத்து நிறுத்தியவன் விபீஷணன்தான்; அன்னை சீதைக்கு அருகிருந்து உதவிகள் செய்து ஆறுதல் அளித்தவள் விபீஷணனின் மகள் திரிசடை மட்டுமே; ஆதலால் விபீஷணனின் சரணாகதியை ஏற்றுக்கொள்ளலாம்’ என அனுமன் கூறினான். இந்நிகழ்ச்சிகளை எளிய நடையில் சித்பவானந்தர் நாடகமாக வழங்கியுள்ளார் .