Price: ₹12
Pages: 46
ISBN: ----
நன்மக்களை பெறுவதற்கு முதலில் தான் நல்லான் ஆகவேண்டும். நல்ல விளைவுக்கு பூமியை பண்படுத்துவது முதற் கடமையாகும். நன்மைகளை ஈன்றெடுக்கத் தாய் தந்தையர் தங்களை தகுதியுடையவர்கள் ஆகுதல் வேண்டும். நெறியான இவ்வளவும் விலங்கு இனத்தில் சிங்கத்துக்கு உண்டு.அதன் விளைவாக அவைகளுக்குப் பிறப்பவை எப்பொழுதுமே செம்மை நிறைந்த சிங்கக் குட்டிகளாம். மக்களுள் நல்லார் யார் உள்ளாரோ அவர்களே இல்லறத்தை நல்லறமாக்க முடியும்.