Price: ₹100
Pages: 296
ISBN: ----
தமிழ் இலக்கியத்தின் சிகரத்தைத் தொட்டவர் ஒருவர் உண்டெனில், அவர் ‘டாக்டர் மு.வ’ என்று தமிழ்கூறும் நல்லுலகெங்கும் நாவினிக்கப் போற்றப்படும் முனைவர் மு.வரதராசனார் ஒருவராகத்தான் இருக்க முடியும். டாக்டர் மு.வ. ஓர் படைப்பிலக்கியவாதி மட்டுமன்று. அவர் தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி முதலிய மொழிகளைக் கற்றுத் தேர்ந்தப் பன்மொழிப் புலவர். ஒரு தமிழ்ப் பேராசிரியர். எல்லாவற்றிற்கும் மேலாக அவர் ஓர் அறவோர். அத்தகைய பெருமை மிக்கவரின் புகழ் பெற்ற படைப்பு இந்நூல்.