Price: ₹80
Pages: 160
ISBN: ----
சமூக முன்னேற்றத்திற்கு தொழில் அடிப்படையானதாகும். செய்யும் தொழிலே தெய்வம் என்று வாழுதல் வேண்டும். எல்லாத் தொழில்களுக்கும் உழவுத்தொழில் அச்சாணிபோல இருந்தாலும் செய்யும் தொழிலில் வேறுபாடு இல்லை. தெய்வம் மேலானது, தூய்மையானது என்பதுபோல தொழிலும் சிறப்புக்குரியதாகும். அத்தகையத் தொழிலை தெய்வம் என்று கருதி செய்தல் நன்று. ஒருவரது உயர்வுக்கும் தாழ்வுக்கும் செய்யும் தொழிலே காரணமாக உள்ளது. அதே தொழிலை ஒருவர் நேர்மை இன்றி பிறர் துன்பம் அடையும் விதமாய் செய்யும் போது நிச்சயம் அத்தொழில் அவருக்கு தாழ்வையே கொடுக்கும். மனம், சொல், உடல் என்பவற்றால் தெய்வத்தைத் தொழுவதுபோல தொழிலையும் உண்மை உணர்வுடன் செய்தல் வேண்டும்.