Price: ₹60
Pages: 48
ISBN: 9789388000093
இதை பயன்படுத்துபவர் கூட விடிந்த வீட்டுக்காரனாய் இருக்க வேண்டுமென்றுதான், இருண்ட வீட்டிற்குள் நான் இருந்து உனக்காக விழித்துக் கொண்டிருக்கிறேன். என் விடியல் ஒவ்வொன்றிலும், வேதனைகளும், சோதனைகளும் போர் நடத்தியுள்ளது. என்னோடு மண்ணாங்கட்டியாய் இருக்கும் மனங்களில் இந்த வேர் நுழைத்து வெளிச்சத்தை தளிர் விடுகிறேன். யுகங்களை கடந்து பழைய வீடு என்பதால், என் சுகங்களனைத்தும் கலந்து மெருகேற்றம் செய்து அந்தத் துரு துடைப்போடு உள்ளே நான் நுழைந்து இருட்டுக்குள் திசையறியாத கண்கள் தொலைநோக்குப் பார்வையை குவிலென்ஸ் மூக்குக் கண்ணாடியாக உனக்கு கொடுத்திருக்கிறேன். நீ பார்க்கும் தொலைவில்தான் என் படைப்பின் பயணம், தீர்மானிக்கப்படும் என் இலக்கினை, உன் பயணமே தொடர வேண்டும். நீ வெளிச்சத்தில் நடந்தால் நான் வெந்துவிட்டேனென்று மார்த்தட்டிக் கொள்வேன். அந்த வீடு இந்த விடியலுக்காகத்தான் எத்தனை காலமாய் இருட்டுக்குள் இருந்திருக்கிறது என்று யூகித்து கண் விழிக்கிறேன்.