Price: ₹600
Pages: 1264
ISBN: 9788192882987
அமரர் கல்கி அவர்கள் பொன்னியின் செல்வன் புதினத்தின் தொடர்ச்சியாகவும், பொன்னியின் செல்வனில் வருகின்ற கதாபாத்திரங்களை மையமாக கொண்டும் எழுத்தாளர் விக்கிரமன் எழுதிய புதினம் நந்திபுரத்து நாயகி ஆகும். இந்த புதினம் மூன்று பாகங்களை கொண்டது. பொன்னியின் செல்வன் புதினத்தினை படித்து முடிக்கின்றபோது பல கேள்விகள் எழும், இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் வருங்கால எழுத்தாளர்கள் பல படைப்புகளைத் தருவார்கள் என்று கல்கி அவர்களே கூறினார். அதன் அடிப்படையில், பொன்னியின் செல்வன் கதாபாத்தரங்களையும், அதே இயல்புகளையும் வைத்து இப்புதினம் படைக்கப்பட்டுள்ளது.