Price: ₹135
Pages: 304
ISBN: -----
"ரொம்ப நல்லாத்தான் தயார் பண்ணியிருக்காங்க!" என்று சிரித்தான் முரளிமோகன். அருகில் இருந்த அவனது பர்சனல் பி.ஏ., வேலாயுதமும் சிரித்துக் கொண்டே தலையாட்டினார். முரளிமோகன் தனது அலுவலகத்தில் ஒரு ஞாயிற்றுக்கிழமை நாளில் அந்த நேர்முகத் தேர்வை நடத்திக் கொண்டிருந்தான். ஞாயிற்றுக்கிழமை நாளில் வரசொலியிருக்கிறானே என்று வேலாயுதத்துக்கு கூட ஆச்சரியமாக இருந்தது. ஆனால், முரளிமோகம் இதைச் செய்தலும் காரணத்தோடுதான் செய்வான் என்பதால் அவரும் புறப்பட்டு வந்திருக்கிறார்.