Price: ₹235
Pages: 376
ISBN: -----
சிறிய தீவு ஆனால், அதன் ஆதிக்கம் உலகின் எந்தப் பகுதியிலும் வியாபித்து இருந்தது. உலகம் பூராவிலும், அதற்க்கு வேட்டை நிலம் ஏராளமாக இருந்தது. எனவே அதற்கான இராணுவ பலமும், கடற்படை அமைப்பும், விமானவளமும், போதுமான அளவு உடையதாக இருந்தது. வெறும் போலி மதிப்புக்காக உலகைக் கட்டியாளவில்லை. பொருளாதாரச் சுரண்டல், அதன் ஆதிக்கத்தின் அடிப்படை. அடிமைப் பட்டுக் கிடைக்கும் நாடுகளின் தேவைகளைத் தெரிந்து, அந்தந்த நாடுகளில் கிடைக்கும் மூலப்பொருட்களை மலிவாகப் பெற்று, அதனை முடிந்த பொருள்களாக மாற்றி, திரும்பவும் அந்தந்த நாடுகளுக்கே அனுப்பி, தன் நாட்டின் செல்வர்களுக்கு நிறைந்த செல்வமும் தொழிலாளர்களுக்கு முதல்தர வாழ்வும் தருவது தான், அதன் ஆதிக்கத்தில் மறைந்து கிடைக்கும் உண்மை......