Price: ₹60
Pages: 96
ISBN: -----
கற்பனைகள் ஆசையோடு குதித்தெழும்பொழுது சுவையான கவிதைகள் பிரசவமாகிறது.எண்ணங்கள் தடையின்றி இதிலிருந்து இதுவரை என்ற வரம்பின்றி, பிரவாகம்போல் ஓடும் போது அபூர்வமான முத்துக்கள் சிதறுகின்றன. மனோதர்மத்தின் ஓட்டமே மயக்கம் மிகுந்த கவிதைக்கு நியாயமாகும். நல்ல ஓவியனின் தூரிகை துணியிலே நர்த்தனமாடும் போது அவன் எதிர்பார்ப்பதைவிட நல்ல ஓவியம் பிறக்கிறது.