Price: ₹50
Pages: 107
ISBN: -----
ஆயிரம் பேய்கள் கழுத்தை நெறிப்பது போல் இருந்தது கடலின் அழுத்தம். அவன் நீச்சலடிப்பதில் வல்லவனாக இருந்தாலும், விமானம் வெடித்த அதிர்ச்சி அவனுடைய உடன் அணுக்களிலும் பரவியிருந்தது. மூச்சைப் பிடித்துக் கொண்டு தலைதூக்கிப் பார்த்தபோது சற்று தூரத்தில் ஒரு கரை தென்பட்டது. இரண்டு மணி நேரமாக அவன் நீந்திக் கொண்டிருந்தது வீண்போகவில்லை. கடலைக்கிழித்து முன்னேறினான். கரையை நெருங்கிவிட்டான்.......