Price: ₹150
Pages: 344
ISBN: -----
மழை மேகங்கள் ஒன்றுதிரண்டு கிழக்குப்பக்கம் திடமாய் நிற்பதால் வெய்யிலில்லாத ஒரு வெளிச்சம் அந்தக் காலை நேரத்தில் நகரமெங்கும் பரவிக்கிடந்தது. வழக்கமாய் இந்த நேரத்திற்கு வெயில் கடுமையாய் தாக்கத் துவங்கியிருக்கும். வியர்வை ஆறாய்ப் பொங்கி ஓடும். பட்டணத்து வாகனப் புகை மேலெழுப்பிக் கண் எரிச்சலும் மூக்கரிப்பும் ஏற்படுத்தும்.