Price: ₹75
Pages: 160
ISBN: -----
வானம் மூடிக் கொண்டிருந்த வேளையில் அவர்கள் சென்னையின் எல்லையை தாண்டினார்கள். ஐம்பத்து இரண்டு இருக்கைகள் கொண்ட பஸ்ஸின் கடைசிப் பக்கமான ஒரு குறுக்குச் சீட்டில் நாற்பத்தி ஏழு பேருக்கான சமையல் சாமான்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. பஸ்ஸின் முதல் இருக்கையில் ஒரு இரட்டை சீட்டில் ஒரு வயதான அம்மாள் படுத்துக்கொண்டு வந்தார்.