அந்த மாருதி வேனின் வலப்பக்கம் பானுமதி உட்கார்ந்திருந்தாள். குளிர் காற்றைக் கிழித்துக் கொண்டு வேன் வடக்கு நோக்கிப் போய்க் கொண்டிருந்தது. தொலைவிலிருந்து கடல் ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருப்பதைக் காண முடிந்தது.