Price: ₹65
Pages: 173
ISBN: -----
'வெல்வெட் மனசு'-ல், அந்தஸ்தில் ஏணி வைத்தால் கூட எட்ட முடியாத தூரத்தில் இருக்கும் நடன ஆசிரியர் தர்மனம், மிராசுதார் மகள் சாந்தாவும் காதலித்து ஒன்று சேர்ந்து இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கும்போது, விதி எப்படி அவர்கள் வாழ்க்கையில் புகுந்து விளையாடுகிறது? அவர்களை பிரித்து வைத்தது யார்? முடிவில் இருவரும் ஒன்று சேர்ந்து பிரிந்த குழந்தைகளுடன் இணைந்தார்களா? என்பதை விறுவிறுப்பு குறையாமல் சொல்லியுள்ளார். இரண்டாவது கதை 'விடியக் காத்திருக்கும் அரும்புகள்'-ல், ஒரு பெண்ணை ஆழமாக நேசித்தவனால், இன்னொருத்தியை ஸ்பரிசித்துப் பார்க்க முடியுமா? பணக்காரப் பெண் கிடைத்தால், அந்த இருவரையும் மறந்து சுயநலவாதியாக மாறமுடியுமா? அவனை அந்தப் பெண்கள் எப்படி எதிர் கொள்கிறார்கள்? பதில்களை தன் யதார்த்தமான நடையின் மூலம் புரிய வைக்கிறார்....