Price: ₹90
Pages: 238
ISBN: -----
'கனவுக் காதலன்' நாயகன் நந்து எந்த வேலையிலும் நிரந்தரமில்லாததை நினைத்து அவன் முன்னுக்கு வரும்வரையாவது தான் உயிரோடு இருக்க வேண்டும் என்று போராடும் தாயார், கேன்சர் பேஷண்ட் என்று தெரிந்தும் நாயகன் விரும்பும் லலனா ஒரு பக்கம் கண்டிப்பு, மறுபக்கம் கருணை.... எப்படி லலானாவினால் இப்படி இருக்க முடிகிறது என்கிற வியப்பு...கனவுக் காதலன் கண்டிப்பாய் படிப்பவர் மனதிலும் சப்பணமிட்டு அமருவான் என்பது நிச்சயம். மற்றொரு நாவலான 'பொய்ப்பூக்கள்'-ல், நம் வாழ்க்கையில் ஒரு தடவையாவது சந்தித்திருக்கும் நல்லவர்கள் போல் நடித்து நம்மை ஏமாற்றும் கதாபாத்திரங்களும், பணத்திற்காக என்ன வேண்டுமானாலும் செய்யத்தயாராக இருக்கும் கதாநாயகன்..... 'பொய்ப் பூக்கள்' ஒரு நல்ல குடும்ப நாவல் என்பது நிச்சயம்.