ராம்நகர் காளிதாஸ் ரோடின் ஏறக்குறைய க...டை..சீ...யில் ஒரு பாரிஜாத மரத்துக்கு கீழே இருந்த ராமநாதனின் வீட்டில் - அவருடைய அறையில் வழக்கம் போல் ஐந்து மணிக்கு வைக்கப்பட்ட அலாரம் காலை ஆறு மணிக்கு சாவகாசமாய் அடித்தது.