Price: ₹200
Pages: 232
ISBN: 9789388104135
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இலக்கியங்கள் வாயிலாக, தமிழ்ப் புலவர்களும் ஆன்றோரும் சான்றோரும் சொல்லிச் சென்ற அறநெறி கருத்துகள் இன்றும் நம் வாழ்க்கையில் எதிரொலிக்கின்றன. இதற்கு ஆகப்பொறுத்தமான எடுத்துக்காட்டாக, ஈராயிரம் ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்துகொண்டிருக்கும் இரண்டடி திருக்குறளைச் சொல்லலாம். உலகின் மற்ற மனித மரபுகளில் அடிப்படை அறிவு தோன்றாதபோதே, அறம் சார்ந்த வாழ்விலும் அறிவியல் சார்ந்த புரிதல்களிலும் தழைத்தோங்கி வாழ்ந்த இனம் தமிழினம். ஆத்திசூடியும் மணிமேகலையும் நாலடியாரும் சொல்லும் அறச்சொற்கள் அனைத்தும், இன்றைய மனித வாழ்வியலோடு எப்படியெல்லாம் ஒத்திசைந்து வருகின்றன என்பதை எளிய நடையில் எடுத்துச் சொல்லியிருக்கிறார் நூலாசிரியர் அருணன்.