Price: ₹150
Pages: 160
ISBN: ----
'இதயத்திலிருந்து' ஒரு மருத்துவர் எழுதிய நூல். ஆனால் மருத்துவ நூல் அல்ல. மகத்தான நூல். இதயம் உள்ளவர்கள் அனைவரும் படிக்கவேண்டிய முக்கியமான நூல். இந்த நூலில் எனக்கு பி.ஆர்.ஜே.கண்ணன் என்ற மதுரையின் புகழ்பெற்ற இதய நோய் மருத்துவர் கண்ணனுக்கு தெரியவில்லை. கண்ணன் என்னும் அற்புதமான மனிதர்தான் பக்கத்திற்கு பக்கம் பளீரிடுகிறார். மருத்துவர்கள் வியாபாரிகளாகி விட்டதைப் பார்த்துப் பார்த்து நம்மில் பலருக்கு அலுத்துவிட்டது. நம் அழுப்பெல்லாம் போகும் வகையில் இந்த நூலில் ஒரு மருத்துவர் மனிதராக, மாமனிதராக உலாவருவதைப் பார்க்கும்பொது எதிர்காலத்தின் மேல் நமக்கு நம்பிக்கை பிறக்கிறது.