Loading…

Chollazhi / சொல்லாழி

Chollazhi / சொல்லாழி
Author: Nanchil Nadan / நாஞ்சில் நாடன்

Price: ₹240

Pages: 263

ISBN: 8187641754

வில்லாளிக்கு அம்பு எத்தன்மைத்ததோ, அத்தன்மைத்தது புலவனுக்கு, எழுத்தாளனுக்கு சொல். சேமிப்பில் சொற்பண்டாரம் இன்றி எழுதப் புகுபவன், கையில் கருவிகளற்றுத் தொழிலுக்குப் போகிறவன். தச்சனோ, கொல்லனோ, குயவனோ, நாவிதனோ, உழவனோ எவராயினும் அது பொருந்தும். அரைகுறையாகக் கருவிகளைச் சுமந்து செல்கிறவன், துல்லியமற்ற, பொருத்தமற்ற கருவிகளைச் சுமந்து செல்கிறவன், திறம்படத் தொழில் செய்ய ஏலாது. 22/24 என்று கேட்கும் மெகானிக் கையில் 26/28 ஸ்பானர் கொடுத்தால் எப்படி? பொருத்தமான இடத்து, பொருத்தமான சொற்களைப் பெய்கிறவனே சிறந்த எழுத்தாளன். இது கவிதைக்கு மாத்திரமான விதி அல்ல. பிறிதோர் சொல், அச்சொல்லைவெல்லாத சொல்லாக, சொல்லுக சொல்லை அது தானே திருக்குறள்.

Goodreads reviews for Chollazhi / சொல்லாழி