Price: ₹100
Pages: 144
ISBN: -----
வேதநாயகம்பிள்ளை தமிழ்மண்ணில் நட்ட நாவல்மரம் இப்போது கிளைத்துச் செழித்திருக்கிறது உலக உரைநடை இலக்கியங்களோடு உரசிப் பார்க்கத்தக்க கனமான படைப்புகளைத் தமிழ் நாவலாசிரியர்கள் தந்திருக்கிறார்கள். உலக மொழிகளின் சார்பாக நாம் உரைநடைக்கு வண்ணக்கம் சொல்ல வேண்டும்.ஏனெனில் உரைநடை என்பது இலக்கியத்தின் கலாசாரத்தையே மாற்றி இருக்கிறது. கவிதை எல்லாருக்கும் அணிய முடியாத ஆபரணமாக இருந்தபோது, உரைநடையோ எல்லாரும் அணிந்துக்கொள்ளும் ஆடையாக அமைந்தது. இந்த அச்சு எந்திர யுகத்தில்,உரைநடை ஒரு கலை வடிவமாகி விடுவது தவிர்க்க இயலாதது