Price: ₹400
Pages: 431
ISBN: -----
அறுதான் அறுத்து பட்டேறி போட்டும் போடாத காய்ந்த மஞ்சள்நிற நெல்வயல்களில் விழுந்தடித்து ஓடுகிறார்கள், உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு முந்தி ஓடுகிறார்கள்.அறிந்த முகங்கள், அறியாத முகங்கள்,பாட்டடிமார்கள், கனத்த மார்பகங்கள் குலுங்க ஓடும் தாய்கள், இடுப்பில் ஒட்டியிருக்கும் கைக்குழந்தைகள், வாலிபர்கள், நடுக்கட்டு வயதுக்காரர்கள், குடிவைத்த தாத்தாக்கள்,கடுக்கன் போட்டவர்கள்,சட்டையில்லாது வெட்டியைச் சுருட்டி தார்பாய்ச்சி கட்டிய விவசாயிகள், தாவணி போட்ட குமரிகள்,பருவம் நெருங்கும் சிறுமிகள், சட்டை அணியாமல் பாவாடை மட்டும் ஓட்டத்தில் தடுக்காமல் இருக்க இடுப்பில் சொருகியவர்கள், அவிழும் சேலையை அந்த வேகத்திலேயே இரண்டு கைகளிலும் முடிச்சுப் போட்டுக் கொள்பவர்கள்.. எல்லாரும் நீ முந்து நான் முந்து என்று ஓட்டுகிறார்கள். குதிரைகளின் குளம்பொலிகள் முன்னைவிட நெருங்கிக்கொண்டுதான் வருகின்றன. தனகோபாலின் அப்பா ஓடுகிறார்....