Price: ₹580
Pages: 640
ISBN: 8187641746
கனலும் இரும்புக் கம்பியுடன் நெருங்கி நிற்கும் சாந்தியின் முகத்தை கண்டதும் பட்டென்று உடலைக் குறுக்கினான் தியாகு, வெறியேறிய கண்கள், வறட்டுச் சிரிப்பு. பாதங்களைப் பார்க்கிறாள்.மறுகணம் அவள் பார்வை அவன் முகத்தில் படிக்கிறது."ஒரு இழுப்பு இழுத்தாத்தான் நீ சரியா வருவே " சதையைப் பொசுக்கும் நெருப்புக்குத் தடம் பார்க்கிறாள். இந்த முறையும் தப்பமுடியாது.கைகால்களில் முதுகில் புறங்கழுத்தில் இருக்கும் தழும்புகளின் எண்ணிக்கையைக் கூட்டப் போகிறாள். பொசுக்கும் சதையின் வாசனை அவளை உசுப்பேற்றும்.இன்னும் இன்னுமெனக் கொதிக்கும் கம்பியை உடலில் வைத்து இழுத்தபடியே சிரிப்பாள்."வேணாம் சாந்தி.... " என்று அலறிய கணத்தில் அவனது இடது காலின் கெண்டைசதையில் சரக்கென்று இழுபட்டது கனலும் கம்பி. விழுக்கென்று கால்களை உதைக்கும் போதே இன்னொரு இழுப்பு அலறியபடியே உருண்டு தரையில் விழுந்தான் தியாகு.