Price: ₹90
Pages: 120
ISBN: -----
சட்டையையும் வேட்டியையும் அவிழ்த்து ரோட்டோரத்தில் வைத்தான் வடிவேல். காற்று தூக்காமல் இருக்க கல் வைத்தான் ஊர்த் திருவிழா எல்லாம் முடிந்துதான் அறுப்பு தொடங்கும். ரோட்டின் இருபக்கமும் கம்பெனி சோளக்கருத்துகள் பால் பருவத்தில் இருக்கின்றன. சற்றுமுன் சோளக் காடெங்கும் பறந்த தைலாங்கள் போய்விட்டன. மின்சாரக் கம்பிகளில் அமர்ந்திருந்த கரிச்சான் குருவிகள் கூடடைந்திருக்க வேண்டும். வெளிச்சம் இரவின் மாடிக்கு இறங்கிக் கொண்டிருந்தது. தோட்டத்தைப் பார்த்தான் கவிழும் இருட்டில் சோளத்தட்டைகள் தன்னைத் தலை தூக்கிப் பார்ப்பது போலத் தோன்றியது. வாரியில் இருந்த பூவரசமரம் கிணற்றிற்கருகில் கோபுரம் போல் நிற்கிறது. எங்கெங்கு மரங்கள் தோட்டங்களில் தெரிகின்றனவோ அதனருகில் கிணறுகள் உண்டு. பூவரசம் பூக்கள் மசங்கும் இருட்டடிலும் தெரிகின்றன. தேய்பிறைக் காலம். நிலவு வர நேரமிருக்கிறது. ஊருக்குத் தென்புறச் சரிவு முழுக்க நெல்வயல் முல்லையாற்றின் இருபுறமும் குறுவை சாகுபடிக்காக ஜனமக்கீரை விதைத்திருக்கிறார்கள்