Price: ₹100
Pages: 108
ISBN: 818764196
இந்த தொகுப்பின் தலைப்பான 'கறங்கு' எனும் சொல் நூதனமாகப் படக்கூடும் சிலருக்கு கறங்கு எனும் சொல்லின் திரிந்த வடிவங்களே கெறங்கு, கிறங்கு எனும் சொற்கள். கெறங்கினான், கிறங்கினான் எனில் ஒருவேளை தெளிவாகும். கெறக்கம் அல்லது கிறக்கம் என்பனவும் அத்தன்மைத்தே. கறங்கு எனில் சுழற்சி, சுழல்தல் என்று பொருள். காற்றாடி கறங்கியது என்றால், காற்றாடி சுழன்றது என்பதே பொருளாகும். ' என்ன' கெறங்கீட்டுத் திரியே?' என்பார்கள் எம்மூரில்,என்ன சுற்றிச் சுற்றித் திரிகிறாய் என்ற பொருளில்.