Price: ₹225
Pages: 199
ISBN: 9789352440092
கோபல்லம் என்ற கிராமத்தின்னுள்ளே ..... 1979இல் புதுமைப்பித்தனின் காஞ்சனை தொகுதி படிக்கக் கிடைத்தது. அடுத்ததாக, ஒரு நண்பனின் ஆலோசனையின் பேரில் கோபல்ல கிராமத்தை எடுத்து படித்தேன். அமெரிக்கன் கல்லுரிநூலகத்தில் இது போன்ற நூல்கள் ஏகப்பட்டவை இருந்தன. ஒருவேளை , அந்தச் சமயத்தில் இரண்டாவது புத்தகமாக மொழியின் கதைகளைப் படிக்க நேர்ந்திருந்தால் என்ன ஆகியிருக்கும் என்று சில சமயம் நினைத்தது கொள்வேன். திகைத்துப் பொய் மிரண்டு விலகவும் நேர்ந்திருக்கலாம். மாற்ற எழுத்தின்பால் எனக்கு உண்டான ஆர்வத்துக்கு ஆரம்பக் காரணங்களில் ஒன்றாக கோபல்ல கிராமம் இருந்தது இனிமையான ஒரு தற்செயல் என்று கருதுகிறேன். அதுவரை நான் படித்தவை நாவல் பெயரில் தொகுக்கப்பட்ட தொடர்கதைகள்தாம் என்று உடனடியாகப் புரிந்தது. புதுமைபித்தணை விடவும் கி.ராஜநாராயணனிடம் கூடுதலாக இருந்த ஒரு அம்சம், அவர் எழுத்தாளர் என்ற பீடத்திலிருந்து என்னுடன் உரையாட வில்லை என்பது. கோபல்ல கிராமவாசிகள் ஒருவராக இருந்து தமது வம்சக் கதையைச் சொல்லும் கதைமாந்தராகவே தென்பட்டார்.